எமது பிரதேசத்தில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், எமது அமைப்பினால் தொடர்ச்சியாக இரத்ததான முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடராக இவ்வருடமும் 4வது இரத்ததான முகாம் நாளை (செவ்வாய்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் உயிர்களைக் காக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் நற்கூலியை பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
குறிப்பு :
பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கும் முகமாக பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்குபற்றும் பெண்கள் இஸ்லாமிய முறைப்படியும், இரத்ததானம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் சற்று தளர்வான(இறுக்கமற்ற) ஆடைகளை அணிந்து வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.