வர்மாவுக்குள் முஸ்லிம்கள் குறித்து விசாரணை நடத்த எவரும் வரக்கூடாது -அந்நாட்டு அரசு



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீது நடைபெறும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த ஐ. நா விசாரணை குழுவுக்கு மியன்மர் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போரட்டம் நடத்தி நோபல் பரிசு பெற்ற ஆன் சாங் சூச்சியின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது.

அதே மியன்மரில்தான் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையில் கடந்த வாரத்தில் மட்டும் 4000 பேர் கொல்லப்பட்டனர். 180,000க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மியான்மர் வன்முறை சம்பவங்களுக்கு ஆங் சாங் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவும் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கப்படும் வன்முறைகள் குறித்த விசாரணை நடத்த அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில் ஐ. நாவின் விசாரணை குழுவுக்கு அனுமதி வழங்க முடியாது என்று மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மியான்மர் வெளியுறவுத் துறை செயலாளர் கவ்சியா கூறும்போது, அவர்கள் இங்கு உண்மையை கண்டறிவதற்காக அவர்களது குழுவை அனுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம். மியான்மரில் நுழைவதற்கான விசாக்கள் ஊழியர்களுக்கோ பணியாளர்களுக்கோ வழங்கபடாது. இதுதான் உலகெங்கிலும் நாங்கள் பயன்படுத்தும் முறை. என்றார். (மடவள நியுஸ்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -