அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பில் தௌிவு படுத்தும் செயலமர்வு இன்று(28) திருகோணமலை ஜெகப் ஹோட்டலில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகமும்-அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் இணைந்து நடாத்தும் இச்செயலமர்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்காக பொதுமக்களை விழிப்பூட்டல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான தகவல்களை கிராம மட்டம் வரையில் பிரச்சாரம் செய்தலானது அனர்த்த அபாயத்தை குறைப்பதற்கும்.ஏற்படும் உயிரிழப்பு .சொத்துக்களுக்கு ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கு ஊடகவியலாளர்களின் சேவை மிக முக்கியமானது
என அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளரரும்-பயிற்று விப்பாளருமான சுகத் திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இவ்வனர்த்தங்களை நாட்டு மக்கள் ஊடகங்கள் மூலமாக அறிவதன் மூலமாகவே அதன் தன்மை பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் அறிந்து கொள்வார்கள். இவ்வாறான பெரும் அழிவுகளை மக்கள் விளங்கி கொள்ளாத வகையில் வாழ்ந்தாலும் இன்று 25 வீதமான அறிவூட்டல்களை மக்களுக்கு ஊடகங்களே வழங்கி வருகின்றன.
இந்ந வகையில் மணல் அகழ்தெடுக்கப்படுவது பாரிய ஒரு பிரச்சினையாக இருந்து வந்தாலும் மகக்ளுக்கு பல நன்மைகளும் கிட்டிகின்றன எனவும் திருகோணமலை மாவட்ட மேலதிக செயலாளர் கே.அருந்தவராஜா இதன் போது கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகளும்-அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்..