மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் மரணித்த தினம் கூட தெரியாத மாகாண சபை உறுப்பினர் சுபைர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவரா பாஷித் அலி கேள்வி

றாவூரில் மறைந்த தலைவர் அஷ்ரபின் நினைவுப் பேருரை நிகழ்வொன்றினை நடத்தி அதில் பங்குபற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களுக்கு மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணித்த தினம் கூட தெரியாமல் இருந்தமை சமூகத்துக்கே பாரிய வெட்கக்கேடாகும் என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பாஷித் அலி தெரிவித்தார்,

அஷ்ரப் மரணித்த தினம் கூடத் தெரியாத சுபைர் மற்றும் மஹிந்த புகழ்பாடிய விமலவீர திசாநாயக்க ஆகியோரைக் கொண்டு அஷ்ரப் நினைவுப பேருரைக் கூட்டம் வைத்து மறைந்த தலைவரின் பெயருக்கே களங்கம் கற்பிக்கும் நடவடிக்கையினை அதாவுல்லா உள்ளிட்டோர் முன்னெடுத்திருந்ததாக பாஷித் அலி குற்றம் சுமத்தினார்,

ஏறாவூர் வாவிக்கரையை மெருகூட்டும் விதத்தில் படகு சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி,

ஏறாவூரில் இடம்பெற்றக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுபைர் தாம் மறைந்த தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தாக கூறினார்.

அவர் எங்கு எப்போது மறைந்த தலைவர் அஷ்ரபுடன் இணைந்து அரசியல் செய்தார் என்பதைக் கூற முடியுமா? கிழக்கு பல்கலைக்கழகத்தின் வாச்சராக கடமையாற்றியதையே அனைவரும் அறிவார்கள்,

அது மட்டுமல்லாது கடந்த 17 ஆம் முதலமைச்சர் எங்கு இருந்தார் அவர் வீதிகளுக்கு அடிக்கல் நாட்டுத் திரிகின்றார் என சுபைர் கூறினார்.மறைந்த தலைவர் அஷ்ரபை நினைவு கூற ஏதாவது செய்தாரா எனக் கேட்டார்,

சுபைர் அவர்களே பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்தது 16 ஆம் திகதி 17 ஆம் திகதியல்ல,அதுவும் அதே தினத்தில் பெருந்தலைவர் அஷ்ரபை நினைவு கூற இடம்பெற்ற தோப்பாகிய தனி மரம் கூட்டத்தில் கிழக்கு முதலமைச்சர் தான் குர்ஆனும் ஒதினார்,

ஆகவே பெருந்தலைவரின் மரண தினம் கூடத் தெரியாமல் அவரின் நினைவுப் பேருரை எனப் பெயரிட்டு முதலமைச்சர் மீது அவதூறு கூறுவதிலிருந்து உங்கள் தரம் தெரிகின்றது,

ஆகவே கேவலமான அரசியல் பிழைப்புக்காக மறைந்த உன்னதமான தலைவரின் பெயரைக் கூறி கேவலப்படுத்தாதீர்கள்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு சேவையும் செய்யவில்லை அவ்வாறாயின் அவரது சேவைகளைக’ கூறுமாறு சவால்விட்டார்,

அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை மையப்படுத்த ஆடைத்தொழிற்சாலை அமைத்து யுவதிகளுக்கு வேலை வாய்யப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆர்பாட்டம் செய்து நிர்க்கதியாய் நின்றபோது நீங்களெல்லாம் அறிக்கை விட்டுத் திரிந்தீர் அப்போது அவர் அவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்,

பல இடங்களில் அவருடைய நிதியில் பல்வேறு பாடசாலைகக் கட்டடங்கள் வீதிப் புனரமைப்புக்கள் என பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏன் நீங்கள் கூறினீர்கள் ஏறாவூருக்கு எந்த சேவையும் முதலமைச்சர் செய்யவில்லை என்று.சேறு சகதியுமாக இருந்த எமது பொதுச் சந்தையை பல மாடிக் கட்டடங்களாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தவர் யார்.

நெல்சிப் நிதியில் கட்டடப்பட்டு பாதியில் நின்ற கட்டடத்தை முழுமைப்படுத்த உள்ளூராட்சி மன்ற அமைச்சு மற்றும் மாகாண சபை நிதியைக் கொண்டு பூரணப்படுத்தியவர் யார்,

அதற்கு அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டபம் மற்றும் வாசிகசாலையை முன்னெடுப்பவர் யார்,

ஏறாவூர் வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சைப் பரிவு மற்றும் வௌிநோயாளர் பிரிவும் மற்றும் பல மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்கியவர் யார்?

குப்பைக் கொட்டும் இடமாக காணப்பட்ட இடத்தை நூறு மில்லியன் ரூபா செலவில் சுற்றுலாத்தளத்தை அமைத்தவர் யார்,

இன்று குன்றும் குழியுமாக காணப்பட்ட பலவீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன இதனையெல்லாம் யார் செய்தது,

ஜனாதிபதியால் மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றீர்கள் சொந்த ஊரின் அபிவிருத்திக்கு நிதி கொண்டுவரத் தெரியாத நீங்கள் மற்றவர்களுக்கு விரல் நீட்டுகின்றீர்கள்,

முடிந்தால் நீங்கள் ஊருக்கு பெயர் சொல்லும்படி செய்த ஐந்து சேவைகளை பட்டியலிடுமாறு கோருகின்றேன்.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு என அவர் முன் பொய் நாடகம் போட்டு விசுவாசம் காட்டும் நீங்கள் அதாவுல்லாஹ் நடத்திய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மேடையேறி இருக்கின்றீர்கள்.

நீங்கள் மேடையில் கூறியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவ்வளவு ஆதரவு என்றால் அதே மேடையில் ஜனாதிபதிக்கு ஏசிய விமலவீர திசாநாயக்கவுக்கு ஏன் ஒன்று கூறமுடியாமல் போனது,

ஆகவே உங்கள் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு கபட நாடகங்கள் வௌிக்கொணரப்படும் என்பதை நாம் கூறிவைக்க விரும்புகின்றோம் என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர பாஷித் அலி கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -