யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு பின்னால் அமைந்துள்ள பண்டிக்குட்டி பிள்ளையார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் குற்றுயிருடன் கடும் இரத்தம் வழிந்தபடி காயமடைந்து காணப்பட்ட நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அப்பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் திருடி வந்தவர் என கூறி இன்று(19) காலை இனந்தெரியாத சிலர் இந் நபரை பலமாக தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக காலையில் குற்றுயிராக காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலைக்கு அனுமதித்த யாழ்ப்பாண பொலிஸார் அங்கு இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் காயமடைந்த நிலையில் இறந்த குறித்த ஆலய பூசகர் உள்ளிட்ட சிலர் விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளதுடன் இறந்தவர் நாவலர் வீதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.