எம்.ரீ.எம்.பாரிஸ்-
தமிழ்,சிங்கள மக்களுடன் சிநோக பூர்வமாக வாழ விரும்புகின்றோம் “ஹஜ் பெரு நாள் நல்லிணக்க பிரகடனம்“ ஓட்டமாவடியில் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி) பெரு நாள் குத்பா பேருரை
புனித ஹஜ் பெரு நாள் தொழுகை மட்டக்களப்பு மாஞ்சோலை மீள் குடியோற்ற கிராமத்தின் அல்-ஹிரா வித்தியாலய மைதானத்தில் இன்று சனிக்கிழமை(02) இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையினை அஷ்ஷெய’க் ஈ.ரீ.அன்வர் ஸஹ்வி அவர்களும் பெருநாள் குத்பா பேருரையினையும் நல்லிணக்க பிரகடனத்தையும் உண்மை உதய மாத இதழ் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் ஸலபி நிகழ்த்தினார்.
குறிந்த பதுரியா மாஞ்சேலை கிராமத்தில் அன்மை காலமாக தமிழ்,முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை சீர்குழைப்பதற்கு சில பேரினவாத சக்திகளும்,குறுகிய எண்னங்கொண்ட அரசியல் வாதிகளும் திட்டமிட்டு இப்பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக அறியக்கிடைக்கின்றது.
நாம் எப்போதும் எமது சகோதர இன மக்களாகிய சிங்கள,தமிழ் மக்களுடன் சிநோக புர்வமாக வாழ விரும்புகின்றோம் என்ற பெருநாள் செய்தியினையும் தங்களது ஒற்றுமையை எவராலும் சீர்குழைக்க முடியாது என’ற “ஹஜ் பெரு நாள் நல்லிணக்க பிரகடனம்“ பதுரியா மாஞ்சோலை கிராம மக்களால் இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களுமாக ஏராளமானோர் தொழுகையிலும்,பிரகடனத்திலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.