எம்.எம்.ஏ.ஸமட்-
'எண்ணியல் உலகில் எழுத்தறிவு' என்ற கருப் பொருளுடன கடந்த 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில். 2017க்கான சர்வதேச எழுத்தறிவு தினம்; அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கமைய இத்தினத்தின் பிரதான தேசிய நிகழ்ச்ச்சிகள் கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விஷேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில்; கடந்த வெள்ளிக் கிழமை ஜா-எல பமுனகமவிலுள்ள 'சன்சூரி ஹவுஸ்' எனும் நிலையத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்சன் ஆகியோரின் சார்ப்பில் கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதி செயலாளர் ஏ.எஸ். ஹேவகே தலைமையில் நடைபெற்ற இத்தேசிய நிகழ்ச்சியில் ஒன்பது மாகாணங்களிலுமிருந்து ஏறக்குறைய 270 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முழுநாள் வைபவமாக நடைபெற்ற இத்தேசிய தேசிய எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான அறிவுசார் மற்றும் விநோத விளையாட்டுகளுடன் கூடிய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இவ்விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி அமைச்சின் மேலதி செயலாளர் ஏ.எஸ். ஹேவகே, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விஷேட கல்விப் பிரிவின் பணிப்பாளர் கே.ஏ.டி புண்ணியதாச மற்றும் சகல மாகாணங்களுக்குமான இணைப்பு அதிகாரிகள் ஆகியோரினால் பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.