தற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?: வைரமுத்து அறிக்கை

மாணவி அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் மரணம் மூன்று வகை.

இயல்பான மரணம்-அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு;

இன்னொன்று கொலை-அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு;

மூன்றாவது தற்கொலை-அது மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு.

அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#மாலை மலர்
#வைர முத்து
#தற்கொலை
#இந்தியா
#மாணவி
#மரணம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -