வாகரைப் பெரும்போகச் செய்கைக்கான கூட்டம்


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருட மானாவரி (வான்மழையை எதிர் பார்த்த) நெற் செய்கைக்கான கூட்டம் வியாழக்கிழமை 28.09.2017 காலை 9 மணிக்கு வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் என்று விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேச விவசாயிகள், பண்ணையாளர்கள், விவசாய, நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச செயலக மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் அடுத்த பெரும்போகச் செய்கைக்கான ஆரம்ப விதைப்பு வேலைகள், இறுதி விதைப்புக் காலம், மற்றும் கால் நடைகளை நெற் செய்கை நிலப்பரப்புக்களிலி;ருந்து மேய்ச்சல் தரைக்கு அப்புறப்படுத்தல், உர மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில்; மானாவாரி, மத்திய மற்றும் மாகாண நிருவாக பெரு நீர்ப்பாசனம், சிறு நீர்ப்பாசனம் உட்பட மொத்தமாக 21 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் ரீ. வேழவேந்தன் தெரிவித்தார்.

இதில் சுமார் 2500 ஏக்கர்கள் பாசன வசதி உள்ளவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -