கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் ஏறாவூரின் பல உள்ளக வீதிகள் மற்றும் வடிகான் புனரமைப்புப் பணிகள் நேற்று மாலை (23.09.2017) ஆரம்பித்து வைக்கப்பட்டன,
இதன் போது ஏறாவூரின் தைக்கா வீதியில் வடிகானொன்று இன்மையால் அந்த வீதி மழைக்காலங்களில் வௌ்ளக் காடாக காட்சியளித்தது,
அதற்குத் தீர்வாக கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் குறித்த வீதிக்கு 10 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீட்டினால் வடிகான் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன் ஏறாவூர் ஓடாவியார் மூன்றாம் குறுக்கு வீதிக்கு கொங்கிரீட் இடும் வேலைத் திட்டமும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் இடம்பெற்றது,
இந்த வேலைத்திட்டம் 8 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா செலவில் கிழக்கு முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது