வடக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையிலிருந்து இடை விலக்கப்பட்டமை தொடர்பில்
அகில இலங்கை ரீதியாக இன்று திங்கள்கிழமையும் -நாளை செவ்வாய்கிழமையும் சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையிலிருந்து இடை விலக்கப்பட்டமை தொடர்பில் பல தடவைகள் கலந்துறையாடல்களை நடாத்துவதற்கு முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.
எனினும் வடமாகாண சுகாதார அமைச்சரையும் மீறி அமைச்சின் செயலாளர் பழிவாங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.