நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
பௌத்த மத்தகுருமார்களை இழிப்படுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நிறுத்தகோரியும் தபாலட்டை போராட்டமொன்று கினிகத்தேன நகரில் 25.09.2017 காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற போராட்டமானது கினிகத்தேன பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்றதுடன் ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அன்மைகாலமாக நாட்டின் பௌத்த மதகுருமார்களை இழிப்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதுடன் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர் இதனால் பௌத்த மதத்தின் புனிதத்தன்மை இல்லாமல் போகின்றது இவ்வாறான செயற்பாட்ட கண்டிப்பதுடன் பௌத்த மதகுருமார்களை திட்டமிட்ட இழிவுபடுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தபாலட்டையை ஐனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் இந்த போராட்டதை ஆரம்பித்துள்ளதாக எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.