12-09-2017 அன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முக்கூட்டு அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களை அவரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வைத்து நேர்காணலுக்கான சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது. அந்தவகையில் அவர் தன்னை ஒரு அரசியல்வாதி என்ற அந்தஸ்துக்கு அப்பால் தானும் ஒரு சாதாரண மனிதன் என்ற உணர்வும் சமூகத்திற்கு தன்னால் முடிந்த முழு அர்ப்பணிப்புடனான சேவையை தொடர வேண்டுமெனும் வேட்கை அவர் உள்ளத்தில் ஆளமாக பதிந்திருந்ததை எங்கள் ஒலிப்பதிவு நாடா சுற்ச்சுமமாக அதனைப் பதிவுசெய்து கொண்டது. இந்நேர்காணல் தொகுப்பு உங்களுக்காக
ஊடகவியலாளர்: அஸ்ஸலாமு அலைக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே
பா.உறுப்பினர்: வஅலைக்கும் முஸ்ஸலாம் வர்ரஹ்மத்துல்லா
ஊடகவியலாளர்: நான் ஒரு ஊடகவியலாளன் உங்களிடமிருந்து சில தகவல்களைத் திரட்ட வந்துள்ளேன்.
பா.உறுப்பினர்: நிச்சயமாக தயவுசெய்து ஒரு 10 நிமிடத்திற்கு பின்னர் உங்களை நான் அழைக்கின்றேன்.
ஊடகவியலாளர்: ஏன்? “திரும்பி பார்க்கின்றேன் அன்றுதான் மக்கள் சந்திப்பு நாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்”
அங்கே வந்த மக்களைப்பார்த்து நான் உணர்ந்துகொண்டேன் பாராளுமன்ற உறுப்பினர் இன மத மொழி வேறுபாடிற்கு அப்பால் நின்று சேவையாற்றக்கூடிய ஒரு அரசியல்வாதி என்று
“ தேவை நாடி வந்த மக்களின் மனநிலை எனக்கு நன்றாக புலப்பட்டது அந்த தருணத்தில் வயது முதிர்ந்த ஒரு வயோதிப பெண் என் அருகில் அமர்ந்திருந்தாள். ஆவளிடம் சில கேள்விகளைக் கேட்ட எனக்கு இப்படியும் ஒரு அரசியல்வாதி இருக்கின்றாரா எனும் கேள்வி என்னுள் தோன்றியது.
ஊடகவியலாளர்: அம்மா ஏன் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க வந்தீர்கள்?
அந்த வயோதிப பெண்: தம்பி எனக்கு ஒரு தேவையும் இல்லை அந்த கொடை வள்ளலை நான் பார்க்க தோன்றும்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வேன். இவர் போன்ற கருணை நிறைந்தவொரு அரசியல்வாதியை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை என கண்கலங்கி என் கரம் பிடித்து சொல்கிறார்.
உடனே அப்பெண்ணை வைத்து பாராளுமன்ற உறுப்பினரை நான் ஜீரணித்துக்கொண்டேன்.
மக்கள் சந்திப்பு என்றபடியால் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரால் நான் அழைக்கப்படுகின்றேன். எனது நேர்காணல் தொடரப்படுகின்றது
ஊடகவியலாளர்: சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு முதல் தடவையிலேயே அதுவும் ஒரு முஸ்லிமாக நீங்கள் வெற்றிபெற்றது எவ்வாறு?
பா.உறுப்பினர்: என்னைப் பொருத்தவரை கட்சிகளுக்கு அப்பால் மனிதநேயத்தின் வெளிப்பாடும் இறைவனின் நாட்டமும் தான் எனது வெற்றியின் முதற்படி
ஊடகவியலாளர்: முதல் தடவையில் நீங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தீர்கள் இந்த விடயம் தேர்தல் காலங்களில் ஏனையோரால் உங்கள் வெற்றி பேசும் பொருளாக மாறியிருந்ததே!
பா.உறுப்பினர்: புன்முருவலுடன் பொதுவாக நான் மக்களை அறிந்ததை விட மக்கள் என்னை நன்றாக அறிந்துகொண்டு இருந்ததை எனக்கு இந்த வெற்றி தெளிவுபடுத்தியிருந்தது.
ஊடகவியலாளர்: ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அதிகமான சேவைகளை செய்கின்றீர்களே அது எவ்வாறு?
பா.உறுப்பினர்: நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்டேன். மக்களின் தேவைகள் இன மத பிரதேசம் கடந்து செய்யப்படவேண்டும். நான் மக்கள் பிரதிநிதி மக்களுக்காக அதாவது என்னை நம்பி வாக்களித்தவர்களின் நோக்கங்களை இயன்ற அளவு நிறைவேறும்வரை எனது அரசியல் பயணம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. என்னால் முடிந்தவற்றை நான் போதுமான அளவு இறைவனின் உதவியுடன் செய்து வருகின்றேன்.
இன்று எனது சொந்த நிதியிலிருந்தே மக்களின் நிறைய தேவைகள் நிறைவேறுகின்றது. அது எனக்கு மன நிறைவாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றது. பணங்களினாலோ பதவி அதிகாரத்தினாலோ இந்த உலகில் எதையும் வென்றும் அர்த்தமில்லை நமக்கு இன்னொரு வாழ்வும் இருக்கின்றதல்லவா?
ஊடகவியலாளர்: வாழ்த்துக்கள்! உங்களின் எதிர்கால அரசியல் நகர்வு பற்றி கூறமுடியுமா?
பா.உறுப்பினர்: எதிர்கால அரசியல் நகர்வு என்ன என்பதைப்பற்றி கேட்கின்றீர்கள் நான் அரசியலுக்கு வந்ததன் பிற்பாடே பல மக்களின் தேவைப்பாடுகளை உணரக்கிடைக்கின்றது. என்னை நம்பி வாக்களித்த ஆதரவளித்த எனக்காக அரசியல் காலங்களில் கஸ்டப்பட்டவர்களுக்கு மடடுமல்லாமல் அனைவருக்கும் என்னால் இயன்ற சேவைகளை நிறைவேற்ற நான் முழு மூச்சாக செயற்படுவேன்.
வன்னி மாவட்டத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வாழும் மக்களையும் தற்போது வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களையும் ஒன்றிணைத்துதான் எனது அபிவிருத்தி செயற்படவேண்டும். வன்னி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் தன்னிறைவு காணப்படவில்லை. இன்னும் நிறைய செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட இருக்கின்றது. இன்று இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவையெல்லாம் நிறவேறும்வரை எனது அரசியல் பயணம் ஒருபோது ஓயப்போவதில்லை.
ஊடகவியலாளர்: நீங்கள் சோர்வாக இருப்பது போன்று தெரிகின்றதே
பா.உறுப்பினர்: ம்ம்.. முன்பு தூக்கமெல்லாம் வீட்டில் தற்போது எனது தூக்கமும் வாழ்க்கையும் வாகனத்தில் தான் கழிகிறது. இது எனக்கொரு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை இதனை நான் சந்தோசமாகவே பார்க்கின்றேன். ஊடகவியலாளரே சில நாட்கள் எனக்கு தூக்கமில்லை என்பதை நீங்கள் உணர்கின்றீர்கள். தூங்க நினைத்தால் தூங்கிக்கொள்ளலாம். தூக்கம் எனக்கு இப்போது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.
ஊடகவியலாளர்: உண்மையில் உங்களைப் பார்த்து பெருமைப்படுகின்றேன். வாழ்த்துக்கள் சேர்!
அதிக வேலைப்பளு காரணமாக உங்களுடன் அதிகம் பேச முடியவில்லை என்பது கவலையளிக்கின்றது. மீண்டும் உங்களை ஒரு ஓய்வு நேரத்தில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்.
பா.உறுப்பினர்: ஓய்வா? ம்ம்.. நான் உங்களை மீண்டும் அழைக்க முயற்சி செய்கின்றேன். அல்ஹம்துல்இல்லாஹ்
ஊடகவியலாளர்: எனது ஒலி நாடா ஓய்வெடுக்க மறுக்கின்றது ஏனோ தெரியவில்லை உடன் அதன் Battery களட்டப்படுகின்றது. மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கலையகம் நோக்கி நகர்ந்து செல்கின்றேன்.