அப்துல்சலாம் யாசீம்-
ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள மதுபானசாலையொன்றின் கூரையை உடைத்து பியர் அருந்தி விட்டு வெறியில் வெளிச்செல்ல முடியாமல் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த நபரொருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக ஹொரவ்பொத்தானை
பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை-சமகிகம பகுதியைச்சேர்ந்த மகிந்த திலகரெட்ண (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஞாயிற்றுக்கிழமை (24) ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள பியர் ஹவுஸ் கூரையை உடைத்து கீழே இறங்கி 2300ரூபாய் பணத்தையும் கெசியர் இலாச்சியிலிருந்து எடுத்துக்கொண்டு உள்ளே பியர்களையும் குடித்து விட்டு கடைக்குள்ளேயே வெறியில் உறங்கிக்கொண்டிருந்த தாகவும் அதனையடுத்து கடை உரிமையாளர் இன்றைய தினம் கடையை திறந்து பார்த்த வேளை நபரொருவர் உறங்கிக்கொண்டிருந்த தாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
வெறியில் உறங்கிக்கொண்டிருந்த நபரை கைது செய்து இன்றைய தினம் கெப்பிட்டிக்கொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.