க.கிஷாந்தன்,நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இறை வழிபாட்டை மேற்கொள்ள வந்த பெண்ணின் பணப்பையை திருடிய, பெண்ணொருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பணப்பையில் இருந்த தன்னியக்க இயந்திர (ஏ.டி.எம்) அட்டையை எடுத்து பொருட்களை கொள்வனவு செய்ததுடன், பணத்தையும் எடுத்திருந்த, நிலையில் பெண்ணொருவரை விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்தள்ளனர்.
அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண்ணையே, 22.09.2017 அன்று இரவு 6 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப் பெண், அந்த அட்டையை (காட்) பயன்படுத்தி, 30 ஆயிரத்து 790ரூபாய்க்கு, ஆடைகள் மற்றும் தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.
ஆடைகளை கொள்வனவு செய்யும்போது, சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே, சந்தேகநபரான அப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான அந்தப் பெண்ணை, அட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 23.09.2017 அன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.