நாட்டின் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் இளைஞர் பாராளுமன்ற சபை விவாதத்தில் தெரிவித்தார். நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு அண்மையில் மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.
ஜனநாயகத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இளைஞர்கள் மனித உரிமைகள், வாக்குரிமை, சமத்துவம், ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களில் தாக்கம் செலுத்த வேண்டும். அரசியல் தலைவர்களை தீர்மானப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகின்றது. எதிர்காலத்தில் அரசியல் பதவிகளை வகிக்க இருக்கும் இளைஞர் யுவதிகள் சமத்துவ அரசியலை வளர்ப்பதன் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.