அபு அலா -
அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய "கல்வியின் நோக்கும் போக்கும்" நூல் வெளியீட்டு விழா (23) அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம் (ADS) கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் மற்றும் அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் எம்.வை.மர்சும் மௌலானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.