மருதமுனை கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான

ருதமுனை கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் ஏற்பாட்டில்(ளுநுளுநுகு)மருதமுனை கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த கலந்;துரைiயாடல் அண்மையில் மரதமுனை அல்-ஹம்றா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.அமையத்தின் தலைவரும், சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம் தலைமையில்; அமையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீதின் ஒருங்கிணைப்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமையத்தின் அழைப்பிற்கிணங்க கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்ரீ.அப்துல் நிஸாம்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,அமையத்தின் பிரதம ஆலோசகர் கால் நடை அபிவிருத்தித் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.எம்.காமில் ஆகியோருடன் கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் மருதமுனைப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும.அமையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு மருதமுனை பிரதேச பாடசாலை மாணவர்களின் தற்போத கல்வி நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டது.அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்;பாணத்திலிருந்து சி.ஜி.ஐ. நிறுவனத்தின் அனுசரனையுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர கணித பிரிவின் பிரதான பாடங்களுக்கான இலகு வழிகாட்டல் புத்தகங்கள் அல்-மனார்,ஷம்ஸ் மத்திய கல்லூரிகளுக்கும்.புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம்.அல்-ஹம்றா வித்தியாலம் ஆகிய பாடசாலை அதிபர்களிடம் மாகாண கல்விப் பணிப்பாளரும்,வலயக் கல்விப் பணிப்பாளரும் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால் மருதமுனை பிரதேச பாடசாலைகளின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பிரிவின் பிரதான பாடங்களான கணிதம்,விஞ்ஞானம்.ஆங்கிலம்,வரலாறு என்பவற்றின் கடந்த ஐந்த வருட பெறுபேறுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு 2016ஆம்,2017ஆம் ஆண்டுகளின் நிலைகுறித்து விஷேட சமர்ப்பணத்தின் மூலம் விளக்கவுரை நிகழ்த்தினார்.

மேற்படி விடையம் குறித்து 2016ஆம்,2017ஆம் ஆண்டுகளின் மருதமுனை பிரதேச பாடசாலைகளின் வீழ்ச்சி நிலை குறித்தும் விஷேட கவனம் செலுத்திய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான ஆலோசனைகளையும்,வழிகாட்டல்களையும் வழங்கினார்.

மேற்படி பாடங்களை பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களையும், அதிபர்களையும் உள்ளடக்கியதான தெளிவான புள்ளி விபரங்கள்,மீளாய்வுத் தகவல்கள் மற்றும் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் என்பவற்றை உள்ளடக்கிய விஷேட கலந்துரையாடல் ஒன்றிணை இம்மாதம் 2017-09-30ஆம் திகதி மீண்டும் நடாத்துவதற்கு மருதமுனை கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம் தீர்மானித்துள்ளதாக அமையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீதின் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -