ஜுனைட்.எம்.பஹ்த்-
தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் மட்டக்களப்பு பிரிட்ஜ் வீவ் ஹோட்டலில் நடைபெற்றது.
இக் கருத்தங்கினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின்(SLPI) அனுசரணையுடன் மனித உரிமை ஸ்தாபனம் (IHR) மற்றும் சமாதானத்திற்கும் அகிம்சைக்குமான அமையமும் (CPN) இணைந்து ஏற்பாடு செய்திருந்து,
இப்பெறுமதிமிக்க கருத்தரங்கில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றிவரும் சமூக சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சமூக ஆய்வாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக் கருத்தங்கினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் வளவாளர்கலான சட்டத்தரணி ஐங்கரன் மற்றும் திரு. அமீர் ஆகியோரால் விரிவுரை செய்யப்பட்டது.
இந்நிழ்வாது சமாதானத்திற்கும் அகிம்சைக்குமான அமையத்தின் (CPN) பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சம்மோளனத்தின் (BDNC) தலைவருமான திரு. SB. சில்வெஸ்டர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கருத்தங்கானது மிகவும் பிரயோசனமாதும் தகவல் அறியும் சட்டம் பற்றிய தெளிவினையும் அதன் பிரயோசனங்களையும், அதன்பாலிருந்த ஐய்ப்பாடுகள் என்பவற்றினை இன்றைய கருத்தரங்கு தெளிவுபடுத்தியது என்று சமூக சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மனித உரிமை ஸ்தாபன (IHR) பிரதிநிதி திரு. மன்சூர் அஹமட் இப்பெறுமதிமிக்க கருத்தரங்கினை மோற்கொள்ள அனுசரணை வழங்கியமைக்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கும், அதன் பிரதிநிதிகள், வளவாளர்ளுக்கும் இக் கருத்தரங்கில் கலந்து பயனடைந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவிப்பதோடு , எதிர்காலத்தில் இவ்வாரான தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பிரதேச ரீதியாக மேற்கொள்ள முற்சிப்பதோடு, மனித உரிமைகள் மற்றும் சட்டம் தொடர்பான பாடநேறிகளை மனித உரிமை ஸ்தாபனம் (IHR) முன்னனெடுக்கப்படவுள்ளதாக தனது உரையில் தெரிவித்தார்.