காரைதீவு நிருபர் சகா-
கல்முனையின் புகழ்பூத்த பிரபல பாடசாலையான கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக மன்னாரைச்சேர்ந்த வண.சகோ. குருஸ் சந்தியாகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கல்வியமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
கல்விச்சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் கல்வியமைச்சு வழங்கிய நியமனக்கடிதப்பிரகாரம் புதியஅதிபர் சகோ.சந்தியாகோ நேற்று(31) வியாழக்கிழமை பாடசாலைக்குச்சென்று கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை அதிபர்சேவை தரம் 3இல் 2009இல் இணைந்துகொண்ட புதிய அதிபர் வண.சகோ. குருஸ் சந்தியாகோ மன்னார் சென்.அன்ஸ் வித்தியாலய அதிபராக கடந்த 8வருடகாலமாக கடமையாற்றியவர்.
இவர் கிறிஸ்தவ அமைப்புகளுள் டி லா சலே எனும் சகோதரர் அமைப்பைச்சேர்ந்தவர். இவ்வமைப்பு உலகத்தில் 60நாடுகளில் கல்விப்பணியை மாத்திரம் செய்துவருகின்ற கிறிஸ்தவ அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கடமையேற்கும் நிகழ்வு!
புதியஅதிபர் வண.சகோ. குரு
ஸ் சந்தியாகோ நேற்று(31) வியாழக்கிழமை மன்னாரின் சக பாடசால அதிபர்களுடன் வந்து பாடசாலைக்குச்சென்று கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீலின் உத்திரவின்பேரில் அங்கு சென்ற கல்முனை தமிழ்ப்பிரதேச கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.திரவியராஜா முன்னிலையில் புதிய அதிபர் ஒப்பமிட்டு சம்பவத்திரட்டுப்புத்தகத்திலும் பதிவுசெய்தார்.
அச்சமயம் பாடசாலையின் பழையமாணவர் சங்கப்பிரதிநிதிகள் பாடசாலை அபிவிருத்திச்சபைப்பிரதிநிதிகள் மற்றும் மன்னாரின் பிரபல பாடசாலை அதிபர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.கல்லூரியின் பிரதிஅதிபர் கே.கருணாகரனும் உடனிருந்தார்.
புதிய அதிபரின் நியமனத்தின்பின்னால் பாடசாலையின் பழையமாணவர் சங்கச்செயலாளர் எந்திரி. ஹென்றிஅமல்ராஜ் பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளர் டாக்டர். என்.ரமேஸ் தலைமையிலான குழுவினர் முழுமூச்சுடன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடமையைப்பொறுப்பேற்ற பின்னர் கல்லூரியின் முகாமைத்துவசபையைக்கூட்டி கலந்துரையாடினார்.
கடந்த 6மாதகாலமாக தற்காலிக பதில் அதிபராகவிருந்த பி.சுவேந்திரரராஜா சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.