பொறுப்பற்ற முறையில் செயற்படும் கிண்ணியா நீர்வழங்கல் சபை

கிண்ணியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இன்று(25) காலை தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி தங்களது மீற்றமானி உடைந்தது தொடர்பாக வியாழக்கிழமை (21)எழுத்து மூலமாக கடிதம் வழங்கப்பட்டது இதுவரைக்கும் குறித்தவீட்டுக்கு வரவில்லை என வினவியபோது குறித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிண்ணியா ஊழியர் ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் சீரிப்பாய்ந்தவாறு தொலைபைசியில் உங்களுக்கு தேவையில்லாத கதை உங்கட விஷயத்தை மற்றும் கதைங்க என பேசியதாக சம்மந்தப்பட்டவர் தெரிவித்தார்.

புதிய நீரினைப்புப் பெறுவது முதல் உடைந்து சேதமாக்கப்பட்டவற்றை சீர்செய்வதற்கு அறிவித்தாலும் மக்கள் விடயத்தில் பொடுபோக்காக செயற்படுவதாகவும் இதனால் மக்கள் குடிநீருக்காக ஏமாற்றப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.புதிய இணைப்பு பெறுவதற்காக பணம் செலுத்தப்பட்ட போதிலும் ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் உள்ளபோதிலும் கிண்ணியா உபதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குட்பட்ட பகுதியில் வசிப்போருக்கு புதிய இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை எனவும் அம்மக்கள் ஆழ்ந்தகவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக உரிய உயரதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு புதிய இணைப்புக்கள்,சீர்செய்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும்.மக்களுடன் தேசிய நீர்வழங்கல் ஊழியர் தொலைபேசி உரையாடலின்போதும் பணிவாக பேசுவதற்கு முயற்சிசெய்யுமாறும் மக்கள் உரியவர்களுக்கும் இது தொடர்பான அமைச்சருக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -