சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கிடையில்
நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் யுனிவேர்ஷல் முன்பள்ளிப் பாடசாலை
முதலிடத்தை தட்டிக் கொன்டது
அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை உற்பத்தித்திறன்மிக்க அமைப்பாக மாற்றுகின்ற
அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கமைவாக தேசிய உற்பத்தித்திறன்
செயலகத்தின் அனுசரனையில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முன்பள்ளிப்
பாடசாலைகளின் செயற்பாட்டினை 5S திட்டத்தின் மூலம் மேம்படுத்தும் நோக்கில்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளிப்
பாடசாலைகளுக்கிடையிலான உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் வெற்றிபெற்ற
பாடசாலைகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் ஜனாப் I.M றிகாஸ்
அவர்களின் தலைமையில் 12.09.2017ம் திகதி பிரதேச செயலக கூட்டமண்டபத்தில்
இடம்பெற்றது
மேட்படி நிகழ்வில்; உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.M.M அர்ஷத்
மற்றும் F.Z சிபானி, நிர்வாக உத்தியோகத்தர் M.T.A வாஹிட; உத்தியோகத்தர் உதவியாளர்
M.I ஜூஹையிர், திவிநெகும தலைமைபீட முகாமையாளர் A.C.A நஜீம், அபிவிருத்தி
ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M.I இஷ்ஹாக், கலாசார உத்தியோகத்தர் M.I அம்ஜாத்,
விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் M.M சாக்கீர், பிரதம முகாமைத்துவ உதவியாளர் A.L.A
றசீட் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.H ஜிப்ரி, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
முன்பளளிப் பாடசாலை ஆசிரியர்கள், பணிப்பாளர்கள்; என பலரும் கலந்து சிறப்பித்தனர். இப்
போட்டியில் முதலாம் இடத்தை Universal முன்பள்ளிப் பாடசாலையும் இரண்டாம் இடத்தை
Happy Kids Home முன்றாம் இடத்தை Kids Voice முன்பள்ளிப் பாடசாலையும் பெற்றுக்
கொண்டது. வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான பரிசில்கள் ,விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பங்குபற்றிய பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும்
வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் Universal முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்சிகள்
இடம்பெற்றது விசேட அம்சமாகும்.