34 வயதான சனத்குமார என்ற இந்த நபரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்புள்ளை நகரிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் இரவு வேளையில் பெண்களை போன்று ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து நடமாடுபவர் என கூறப்படுகின்றது.
இது தொடர்பாக, ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவர் என தம்புள்ளை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீடகப்பட்டபோது இவர் பெண்களை போன்றே ஆடைகளை அணிந்திருந்தார் என்றும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இனந்தெரியாத நபர்களின் தாக்குலுக்குள்ளாகி இவர் கொல்லப்பட்ட இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தடி (பொல்லு) போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணங்களோ கொலையாளிகளோ இதுவரை இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் தெரியவில்லை என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.(BBC)