சமய வேற்றுமை என்பது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் சமூக மோதல்களுக்கான அடிப்படையாக இருந்து வருகின்றது. இதனால் அரசுகள் பல்வேறு சமயங்களடங்கிய சமுகத்தில், சமயங்களைப் பற்றி இம்சிப்பவர்களுக்கும், அதிகாரங்களைப் பயன்படுத்தி சமயக் கடமைகளைத் தடுப்பவர்களுக்கும் எதிராக, பொறுப்புடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இன முரண்பாடுகளையும், இம்சித்தலையும் இல்லாதொழிக்க முடியும் சமயப் பின்பற்றுதலைத் தடுத்தலானது அடிப்படை உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
போரதீவுபற்று பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் நடராசா மோகனதாஸ் அவர்களி;ன் தலைமையி;ல் அந்நிறுவன கேட்போர் கூடத்தில் 18.09.2017 அன்று நடைபெற்ற இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வி;ன் போது வளவாளராகக் கலந்து கொண்ட அஸீஸ் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின் மூன்றாவது அத்தியாயாயத்தில் உள்ள அடிப்படை உரிமையில், தனி மனிதன் ஒருவனுக்கு தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் அடிப்படை உரிமையும,; சுதந்திரமும் உள்ளதென்பது சந்தேகமின்றி அதன் உறுப்புரைகள் மூலம் பாதுகாக்கப்;படுகிறது. எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், மதிப்பிலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறந்துள்ளனர் என்றும், ஏதேனும் வகையினதான வேறுபாடின்றி குறிப்பாக, இனம். நிறம் அல்லது பிறப்பிடம் காரணமாக எல்லா உரிமைகளும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவர்கள் என்றும், சட்டத்திற்கு முன் சமமாகவுள்ளாரென்பதையும் ஏதேனும் ஓரங்காட்டுதலுக்கெதிராக ஏதேனும் தூண்டுதலுக்கெதிராக சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்பதை சர்வதேச சமவாயம் எடுத்துரைக்கிறது. இந்த வகையில் இன்று ஒவ்வவொரு சமயத்திற்குள்ளும் பல பிரிவினைகள் காணப்படுகிறது. இது அதீத தீவிர இயக்கங்களாக பிரிந்து சமயத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்ற விடயம்தான் மிகவும் கவலைக்குரியது.
மனித நாகரிகமும், ஆராய்ச்சியும்தான் இதற்குக் காரணம் எனலாம். பழமைவாதிகளின்; கருத்துக்களை உதாசீனம் செய்யாது கேட்கி;ன்ற நிலையில் தற்போதைய இளைஞர் சமுகம் இல்லை. அதனை ஆராய்ந்து யதார்த்தமா என சிந்தித்து செயற்படுகின்ற சமூகம் இருப்பதால் எவரும் பொறுப்பற்ற விதத்தி;ல் போதனைகளைச் செய்ய முடியாது.
மனிதரிடையே அல்லது ஒரு சமூகத்தினரிடையே கருத்தியல் ரீதியான மோதல்கள்; ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை முடிவுக்கு கொண்டு வரக்கூடியவையாகவிருந்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இன்னுமோர் வகையில் கூறுவதானால் சமாதான செயன்முறையின் பரிமாணங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும் என மேற்கண்டவாறு அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.
மனிதரிடையே அல்லது ஒரு சமூகத்தினரிடையே கருத்தியல் ரீதியான மோதல்கள்; ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை முடிவுக்கு கொண்டு வரக்கூடியவையாகவிருந்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இன்னுமோர் வகையில் கூறுவதானால் சமாதான செயன்முறையின் பரிமாணங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும் என மேற்கண்டவாறு அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.