எந்த அரசியல் கட்சிக்கும் சார்ந்து போகவோ அல்லது அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஏற்று
நடக்கவோ இந்த அமைப்பு ஒருபோதும் துணை போகாது என்று அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்பின்
தலைவரும் நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய
கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அம்பாறை
மாவட்ட சிவில் சமூக அமைப்பின் முதலாவது அமர்வு இன்று (30) அம்பாறை மாவட்ட செயலக கலாச்சார
மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில்,
இந்த
அமைப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியாணி விஜய விக்ரம அவர்கள்
ஆலோசகரா இருக்கின்றார். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவனாக இரிக்கின்றேன்.
இதேபோல் இந்த அமைப்பிலுள்ளவர்களும் அவர்கள் சார்ந்த வேவ்வேறு கட்சிகளில் இரிக்கின்றார்கள்.
அதற்காக தங்களின் அரசியல் கட்சி சார்ந்த கருத்துக்களை இங்கு முன்வைப்பதற்கு ஒருபோதும்
இடமில்லை.
தனிப்பட்ட
விடயங்களில் உங்களின் அரசியல் நடவடிக்கைகளை முடிந்தளவு நீங்கள் முன்னெடுத்துச் செல்லலாம்.
அதற்கு இங்கு யாருக்கும் தடை விதிக்கப்போவதில்லை. நாம் எல்லோரும் மாவட்ட ரீதியாக அம்பாறை
மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள். தங்களின் நடவடிக்கைகள்
யாவும் சமூகம் சார்ந்தவையாக இரிக்கவேண்டும். அதற்காக நாம் தனித்தனியாக இயங்காமல் எல்லோரும்
ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் எமது அமைப்பை மிக திறன்பட முன்னெடுத்துச் செல்லலாம்
என்றார்.
இந்த
அமைப்பின் நிருவாகக் காலம் ஒரு வருட காலமாகும். அதற்குள் மிக அவசரமான பல வேலைத்திட்டங்களை
நாம் முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இரிக்கின்றோம். அந்த வகையில், எமது அமைப்பின் காரியாலயங்களை எங்கு
அமைப்பது, அதற்கான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம், எனைய சக தனியார் நிறுவனங்களுடன்
எமது அமைப்பையும் அதனுடன் தொடர்புபடுத்தி என்ன வழியில் இட்டுச்செல்வது, சமூகத்துக்கும்
எமக்கும் உள்ள தொடர்புகளை எவ்வாறு எற்படுத்தலாம் என்ற பல கருத்துக்களை இதன்போது அவர் முன்வைத்தார்.
இங்கு
முன்வைக்கப்பட்ட கருத்துக்களில், இந்த அமைப்பின் தலைமைக் காரியாலயத்தை அம்பாறை மாவட்ட
செயலகத்திலும், உப காரியாலயத்தை நிந்தவூர் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி
திறந்து வைப்பதாகவும், இந்த அமைப்பின் மாதாந்த அமர்வுகளை மாவட்டத்திலுள்ள முக்கியமான
பிரதேசங்களில் நடாத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன்,
இந்த அமைப்பிலுள்ளவர்கள் சரியான அறிவித்தல் இன்றி 3 அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை
என்றால் அவர்களை நீக்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.