கல்முனை சாஹிராவில் பரீட்சை முடிவுகளை ஒன்லைனூடாக பார்க்கும் வசதி!
எம்.வை.அமீர்,எஸ்.எம்.எம்.றம்ஸான் -
பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கை பரீட்சைத் திணைக்கள ஒன்லைனூடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை கல்முனை சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 2017-09-21 ஆம் திகதி அங்குராப்பனம் செய்து வைத்தது.
கல்லுரியின் அதிபர் எம்.எஸ் முஹம்மட் தலைமையில் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த அங்குராப்பன நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டு ஒன்லைன் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றமீஸ் மற்றும் கல்முனை பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எம். றஹீம் ஆகியோரும் குறித்த சேவையை வடிவமைத்த இணைய பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.நிஷாட் உட்பட அதிதிகளாக பிரதி அதிபர் எம்.எஸ் அலிக்கான்,எம்.எம்.நிஸார்டீன் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ.பிB.ஜௌபர் உள்ளிட்டவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
www.kmzahira.com என்ற குறித்த இணையத்தளத்தினூடாக இன்றுமுதல் கல்முனை சாஹிரா கல்லூரிபரீட்சை முடிவுகளை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.