படைப்புகள் வழியாக நல்லிணக்கம்

ஊடக அறிக்கை
வர்ணங்களால்  பேசுவோம்

மந்த்ரா லைஃப் சென்டர் மாதம் தோறும் நடாத்திவரும் ”படைப்புகள் வழியாக நல்லிணக்கம்” என்ற தொனிப்பொருளிலான ஒன்றுகூடல் நிகழ்வு இம்மாதம் ”வர்ணங்களால் பேசுவோம்”  என்பதாக 30ஆம் திகதி, செப்டம்பர், 2017  அன்று கொழும்பு  - 07,  ரேஸ் கோர்ஸ் அருகே (விளையாட்டு  அமைச்சு  வாகனத் தரிப்பிடம்) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரையும் நடைபெறவுள்ளது. 

திறந்த  வெளியில் நடைபெறவுள்ள இப்பொது நிகழ்வில் இன, மத, நிற, வயது, பால் வேறுபாடுகள் அற்ற  வகையில் அனைவரும்  ஒன்றிணைந்து பல்லின சமூகத்தில் நல்லிணக்கம் பற்றிய  தத்தமது பிரக்ஞையை வர்ணங்களாலும், ஓவியங்களாலும், சித்திரங்களாலும் வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.  பாடசாலை மற்றும் பல்கலைக்கழக  மாணவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் கலந்து  கொள்ள ஊக்குவிப்படுகின்றனர்.
மேற்படி செய்தியை தங்களது ஊடகங்களில் பிரசுரித்தும் ஒளிஒலிபரப்புச் செய்தும், சமூக நல்லிணத்திற்கான எமது செயற்பாட்டில் பங்குதாரராகுமாறு  அன்போடு  வேண்டுகிறோம்.

நன்றி.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு
மந்த்ரா லைஃப் சென்டர்.
தொடர்புகளுக்கு 0766313182

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -