அனிதாவும் அநியாய மோடியும்.....

Mohamed Nizous-
னிதா என்று
இனிதாக வாழ்ந்த பெண்
இனி தாங்க முடியாது என
தனியாக செத்துப் போனாள்

மூட்டு வலிக்க
மூட்டை சுமக்கும் தந்தை.
கூட்டிலே தாயின்றிக்
கூவினாள் தனியாக.
கழிவறை கூட இன்றி
காட்டாறாய் வறுமை தாக்க
வெறியோடு படித்தாள்
வெற்றியோடு முடித்தாள்.

மருத்துவம் கற்பதற்கு
பொருத்தமாய் புள்ளி பெற்றும்
விதி
மோடியின் முதுகில் ஏறி
ஓடி வந்து
உட்கார்ந்து கொள்ள
அந்தச்
சின்னப் பெண்ணின் எதிர்காலம்
சின்னாபின்னமாகிப் போனது.

ஓடி ஓடி
கேடிகளையும்
கோடிகளையும் கவனித்த
மோடி அரசு
கிராமங்களின்
கோடிகளில் வாழ்ந்த
குப்பத்து மக்களை
வாடி ஏங்க விட்டது.

ஆட்டுக்கு காவல்
மாட்டுக்குக் காவல் என்று
ஆர்ப்பரித்த அரசு
நாட்டின் ஏழைக்கு
வேட்டு வைக்க
நீட் எனும் துப்பாக்கியை
நீட்டிப் பிடித்தது.

' நீட்'டை நிறுத்து என
போட்ட கோஷமெல்லாம்
கேட்டுத் திருந்தாத
நாட்டு அரசு
அனிதாக்களைக் கொன்று
அரங்கேற்ற நினைப்பது
தாழ்த்தப்பட்ட இனங்கள்
வீழ்த்தப்பட வேண்டும்
உள்ளவனே தொடர்ந்து
உயரப் பறக்க வேண்டும்.

மோடியின் தலைமையில்
நாடு இருக்கும் வரை
அனிதாக்கள் பல பேர்கள்
அநியாயமாச் சாவதை
ஆராலும் நிறுத்த முடியாது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -