மாபெரும் முப்பெரும் விழா எனும் மகுடத்தில் ஏறாவூர் மண் மகிழ்ந்த பொன் விழா



ஹம்ஸா கலீல்-

றாவூர் தாருல் குர்ஆனில் கரீம் அமைப்பின் ஏற்பாட்டில் இறைவனின் இல்மை சுமந்தும் முப்பது வருடங்களாக ஏறாவூர் குல்லியதுல் தாருல் உலூம் கலாசாலையினால் பட்டம் வழங்கப்படாத எழுபது ஹாபிழ்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற அதிபர் எம்.எஸ் அபுல் ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நஜீமுதீன் (முப்தி) அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட சமூகப்பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் போது முப்பது வருடங்களாக பட்டம் வழங்கப்படாத எழுபது ஹாபிழ்களும் இந் நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளால் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -