க.கிஷாந்தன்-
வெலிமடை அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் 06.09.2017 அன்று முதல் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 42 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடவேண்டிய குறித்த வைத்தியசாலையில் தற்போது 21 வைத்தியர்களே கடமையில் உள்ளதாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்கள் பற்றாக்குறை சம்மந்தமாக தாம் ஏற்கனவே பல முறை சம்மந்தபட்ட தரப்பினருக்கு தெரிவித்திருந்த போதிலும் அதற்கான தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையினால் தாம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வெலிமடை கிளையின் செயலாளர் நாமல் பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.
ஊவா பரணகம, வெலிமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை வருவதாகலும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். சம்மந்தபட்ட தரப்பினர் முன்வந்து வெலிமடை வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர்களை நியமித்து தரும் வரை தாம் இவ் பணி பகிஷ்கரிப்பினை தொடரவுள்ளதாக வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
06.09.2017 அன்றைய தினம் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர, வெளி நோயாளர் பிரிவு உட்பட ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. எது எவ்வாறாயினும் வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படுவது நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.