சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் மீனவர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்துள்ளார் என முறையிடப்பட்டுள்ளது.
காரைதீவு 8ஆம் பிரிவைச்சேர்ந்த வடிவேற்பிள்ளை யோகராசா (வயது60) என்பவரே இவ்விதம் மரத்தில் தூக்கிலிட்டு மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான யோகராசா மீன்வியாபாரத்திலீடுபட்டுவருபவராவார். மூன்று பிள்ளைகளில் ஒருபிள்ளை சுனாமியில் மரணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் முரண்பட்டநிலையில் நேற்று சனியன்று காலை 7மணியளவில் புறப்பட்ட அவர் காரைதீவு காளிகோவில் அருகிலுள்ள மயானப்பிரதேசத்திலுள்ள சவுக்கு மரமொன்றில் நைலோன் கயிறுகட்டி தூக்கிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இன்று (24)ஞாயிறு காலை அவர் தூக்கில் தொங்குவதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து மனைவி சம்மாந்துறைப் பொலிசிடம் சென்று முறையிட்டுள்ளார்.
சம்மாந்துறைப்பொலிசார் நீதிவானிடம் அறிவித்துள்ளனர். நீதிவான் வந்து பார்வையிட்டதும் சடலம் பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவி முத்துலெட்சுமி சம்மாந்துறைப்பொலிசில் வாக்குமூலமளித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தில்:
கடந்த ஒருவார காலமாக வீட்டில் தகராறு காரணமாக மதுபோதையில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று(23) காலை 7மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பிவரவில்லை. எனவே நாம் இடம்பூராகத் தேடினோம்.கிடைக்கவில்லை. இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதாகக்கேள்வியுற்று அங்கு சென்றுபார்த்தேன். பின்பு பொலிசிற்கு அறிவித்தல் கொடுத்தேன். என்றார்.