மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் 1000KM வீதி அமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் மீராகேணி கலந்தர் வீதி கொங்றீட் வீதியாக புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.
இவ்வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா அல்-இக்றா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.கே.கே.கலந்தர் தலைமையில் நேற்று (15) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது ஏறாவூர் நகர பதில் பிரதேச செயலாளர் ஏ.சீ.றமீஸா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர் சியாவுல் ஹக், நகர சபை முன்னாள் பிரதி தவிசாளர் ரெபுபாசம், முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் யூ.கே.ஜெயினுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான சுபையிரின் வேண்டுகோளுக்கினங்க இவ்வீதியினை புனர்நிர்மானம் செய்வதற்கென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சுமார் 1கோடி 80இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேற்குறித்த திட்டத்தினூடாக ஏறாவூர் ஹிதாயத் நகர் பிரதான வீதி சுமார் 1.4கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சுபையிரின் முயற்சிக்கு அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.