மு.இராமச்சந்திரன்-
தலவாக்கலை வட்டகொடை மெதகும்புர தோட்டத்தில் புணர் நிர்மானம் செய்யப்பட்ட குளத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் விவசாய அமைச்சருமாகிய துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரால் திறந்து வைத்து 28.10.2017 மக்கள் பாவணைக்கு கையளித்தார்.
மதியமாகாண விவசாய அமைச்சின் 100. லட்சம் ரூபா நிதியில் புணர் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி குளம் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் மக்கள் பாவணைக்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இரண்டாயிரம் மீன்குஞ்சுகளும் இடப்பட்டதுடன் மேற்படி குளத்து நீரினூடாக மெதகும்பு தோட்டம் மற்றும் கிராமத்தை சேர்ந்த 3000 விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.
மேற்படி குளம் திறப்பு விழா நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.