பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்டத்தில் தழிழ் பேசும் 10 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் இன்று (15) தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்ககையில்,
அண்மைக் காலங்களில் தொற்றா நோய்களின் தாக்கம் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும், உலக நாடுகளிலும் மிக அதிகமாக காணப்படுகின்ற இந்நிலைமையினை கருத்திற்கொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிம் ஆகியோர்களின் ஆலோசனைக்கமைவாக ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதியுடன் ”ஆரோக்கியமான உணவு முறை, ஆரோக்கியமான குடும்பம்” எனும் தொனிப் பொருளில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் தழிழ் பேசும் 10 பிரதேச செயலகங்களான அக்கரைப்பற்று, அலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, இறக்காமம், சாய்ந்தமருது , கல்முனை தழிழ் பிரிவு மற்றும் முஸ்லிம் பிரிவு போன்ற பிரதேச செயலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரங்களில் கல்விகற்கும் 40 மாணவர்களுக்கும் குறித்த பாடசாலையின் 20 ஆசிரியர்களுக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் இம்மாதம் 19 ஆம் திகதி அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலும், 20 ஆம் திகதி நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலும், 21 ஆம் திகதி சம்மாந்துறை, கல்முனை தழிழ் பிரிவு மற்றும் முஸ்லிம் பிரிவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் மாதம் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் கல்முனை மற்றும் இறக்காமம் போன்ற பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் யாவும் காலை 09 மணி தொடக்கம் 11 மணி வரையும், 11.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையும் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.