நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
தலுவதுமுல்லை ரயில் குறுக்கு வீதியின் வாயில் மூடப்பட்டிருந்த வேளை, வேன் ஒன்று பாதுகாப்பற்ற முறையில், அதனை ஊடறுத்துச் செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போது காலியில் இருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் எஞ்சின் குறித்த வேனுடன் மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த 14 பேர் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அதில் இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மீடியாகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.