காத்தான்குடி டீன் வீதி வடிகான் அபிவிருத்தி பணிகளுக்கென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 27.08.2017 அன்று டீன் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
டீன் வீதி வடிகான் அபிவிருத்தியை முழுமையாக முடிவுருத்தும் வகையில் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாய் நிதி தற்போது இராஜாங்க அமைச்சர் அவர்களினால் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தடைப்பட்டிருந்த டீன் வீதி அபிவிருத்தி பணிகள் முழுமையாக வடிகான் அபிவிருத்தியுடன் செய்து முடிவுருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.