தாதாவின் பெயரை வைத்து 1325 மில்லியன் ரூபா கொள்ளயடிப்ப வர்களை விரைவில் எப்.சி.ஐ.டி கொண்டு செல்வேன்.. திகாம்பரம்





மு.இராமச்சந்திரன்-

தாத்தாவின் பெயரை வைத்து 1325 மில்லியன் ரூபா கொள்ளையடித்தவர்களை விரைவில் விசாரணைக்கு எப்.சீ.ஐ.டி க்கு அனுப்புவேன் என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றம் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

பெருந்தோட்ட பகுதிகளில் புதிதாகநிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகளுக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

அட்டன் டன்பார் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும் தொனிப்பொருளில் 2864 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் பேதே இவ்வாறு தெரிவித்தார்

மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்ணிமாக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டத்தின் முன்றாம் கட்ட காணி உறுதி வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்

தேர்தல் காலத்தில் நான் உங்களிடம் உறுதியளித்ததுபோல தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன் அதே போல பிரதமர் ரணில் அவர்கள் வாக்குறுதியளித்தது போல 50 ஆயிரம் வீடுகளை அமைக்க அனுதியும் வழங்கியுள்ளார் அதற்கு நான் அவருக்கு நன்றியை தெரிவிவித்துக்கொள்கின்றேன் தற்போது கட்டம் கட்டமாக வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது நான் எந்த வேலைத்திட்டத்தை செய்தாலும் அந்த வேலைத்திட்டத்தை நாங்களே முன்வத்தோம் என சில உரிமை கொண்டாடுகினறனர் காணி. தனிவீடு மற்றும் உறுதிபத்திரம். பிரதேச சபைகளைஅதிகரித்தல் என எல்லவற்றுக்கும் சிலர் உரிமை கோறுகின்றனர் மலையகத்திற்கு சிறப்பாக சேவையாற்றி அமரத்துவம் அடைந்த அந்த சிறந்த மனிதரை நான் எப்போதும் குறை கூறியதில்லை ஆனால் அப்படியான ஒரு உறவு என தாதாவாக கிடைத்திருந்தால் மலைய,த்தையும் அந்த தொழிற்சங்கத்தையும் எங்கோ உயர்த்தியிருப்பேன் தாதாவின் பெயரை வைத் து சிலர் ஊழல் மோசடியில்ஈடுபட்டுள்ளனர்.

 அது தொடர்பிலான தகவல்களை திரட்டியுள்ளேன் இந்திய பெண்மனியான ரூபா ராம் என்பவருக்கு செரண்டிப் கம்பனி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது இதற்காக பொது மக்களின் பணத்திலிருந்து 13 கோடி ருபா பணம் கொள்ளைளடிக்கப்பட்டுள்ளது இன்று எனக்கெதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றது விரைவில் அவர்களை விசாரணைக்கு எப் சி ஐ.டி க்கு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றார் மேலும் நான் அபிவிருத்தியை மட்டுமல்ல உரிமை திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றேன்.

 மீண்டும் அடிமையாக மாடி வீட்டு திட்டம் வேண்டும் தனி வீட்டுத்திட்டம் வேண்டுமா என நீங்கள் தீர்மாணியுங்கள் எமது முற்போக்கு கூட்டனியை யாரும்உடைக்க முடியாது. அமைச்சர்களான ராதாமற்றும் மணோகனேசன் ஆகியோரின் ஒற்றுமையுடன் எமது பயணம் தொடரும் என அவர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -