18 வயதுக்கு குறைந்த சிறுமிகளை திருமணம் முடித்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையே- உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியா:

 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும் நாடு முழுவதும் குழந்தைகள் திருமணங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றன. தகவல் கிடைத்து உரிய நேரத்தில் தடுக்கப்படும் சிறுமிகள் பொலிசாரால் மீட்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், சுமார் 15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமை குற்றமாகவே கருதப்படும். திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் கணவன் மீது மனைவி புகார் அளித்தால் அதுவும் வன்கொடுமையாக கருதப்படும்.

18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற ஷரத்து நீக்கப்படுகிறது, என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.(மா.ம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -