18.5 மில்லியன் ரூபா செலவில் கண்டியில் 3 நீர் வழங்கல் திட்டங்கள் திறந்துவைப்பு

ண்டி மாவட்டத்தில் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று நீர் வழங்கல் திட்டங்கள் நேற்று (08) சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வெலம்பொட பகுதியிலுள்ள கொன்டியாதெனிய அல்டன்வத்தை பிரதேசத்தில் 3.5 மில்லியன் ரூபா செலவில் 100 குடும்பங்களுக்கும், கடுகண்ணாவையில் பலான - மொட்டான பிரதேசத்தில் 10.5 மில்லியன் ரூபா செலவில் 1000 குடும்பங்களுக்கும், முடுனேகட - தலாதுஓயா பிரதேசத்தில் 4.5 மில்லியன் ரூபா செலவில் 450 குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதன்போது மதஸ்தலங்களுக்கு நீர்த்தாங்கிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, வேலுகுமார், மாகாணசபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், மகிந்த அபயக்கோன், சாந்தானி கோங்காஹகே, காமினி விஜயபண்டார, மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நயீமுல்லாஹ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -