மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களின் 18 வது சிறார்த்த தினத்தை நினைவூட்டும் நிகழ்வு 30.10.2017 இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் (பழைய பாராளுமன்றம்) இடம் பெற்றது . இந் நிகழ்வில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன் .
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் ,மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் , ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.