நாளை 'மீண்டும் பள்ளிக்கூடம் செல்வோம்' 1970-1990 வருட கல்முனை உவெஸ்லி ஆசிரியர்களின் ஒன்றுகூடல்!

காரைதீவு குறூப் நிருபர் சகா-
ல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் 1970 முதல் 1990 வரையுள்ள காலப்பகுதியில் ஆசிரியர்களாகப்பணியாற்றியோர் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் பள்ளிக்கூடம் செல்வோம் என்ற ஒன்றுகூடலை நடாத்தவுள்ளனர்.

இவ் ஒன்றுகூடல் நாளை 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4மணிவரை கல்முனை உவெஸ்லியில் ஏற்பாட்டாளர் ஜெபேஸ்ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக அக்காலப்பகுதியில் ஆசிரியராகவிருந்து தற்போது பேராசிரியராகஇருக்கும் எஸ்.மௌனகுரு கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

1970 – 1990 வரையுள்ள காலப்பகுதியில் 138ஆசிரியர்கள் இருந்தபோதிலும் உயிருடன் அல்லது உள்நாட்டிலிருக்கும் அத்தொகுதி ஆசிரியர்களின் தொகை 67ஆகும்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை புதுமுறையில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழச் செயலாளரும் ஓய்வுநிலை தமிழ்மொழிப்பாடத்தறை உதவிக்கல்விப்பணிப்பாளருமான வ.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -