ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
**Late (லேட்டா) வந்தாலும் (Latest) லேட்டெஸ்ட்டா வரனும்** பஞ் டயலாக்கிற்கு அமைவாக நூற்றாண்டினை கொண்டாடிய சாதனைகளோடு தனது இரண்டாம் நூற்றாண்டுக்கான சாதனைகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 1996ம் ஆண்டைய G.C.E (O/L) நண்பர்கள் வட்டம் நடாத்திய ஒன்று கூடல் நேற்று (07.10.2017) சனிக்கிழமை பாசிக்குடா காம் (THE Calm Resort & Spa Passikuda) உல்லாச ஹோட்டலில் வெற்றிகரமாகவும், பாரட்டுனனும் வரலாற்று பதிவாக நடந்தேறியது.
ஒன்று கூடலின் முக்கிய விடயமான இராப்போசன விருந்துடன் G.C.E.(O/L)1996ம் ஆண்டைய மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் விடயம் எதிர் பார்க்கப்பட்டதை விடவும் மிகச் சிறப்பாக இடம் பெற்றதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. அத்தோடு கற்பித்த அசியர்களை வைத்து G.C.E.(O/L)1996ம் ஆண்டைய நண்பர்களுக்கான டீ சேர்ட் அறிமுகப்படுத்தலும் மிகவும் மகிழ்ச்சிகரமான முறையில் இடம் பெற்றது.
எல்லாவற்றுக்கும் ஓரு படி மேலாக ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஹிஜ்றா வித்தியாலயத்தின் இடம் பற்றக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதன் காணி கொள்வனவிற்காக 1996 O/L நண்பர்களினால் சேர்க்கப்பட்ட (190000/=) ரொக்கம் உத்தியோக பூர்வமாக பாடசாலை யின் அதிபர் திருமதி எஸ்.எஸ்.ஹமீட்டிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலதீகமாக இம்முறை வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் ஓட்டமாவடி சரீஃப் அலி வித்தியாலயத்திலிருந்து 191 புள்ளிகளுடன் கிழக்கு மாகணத்தில் முதலாம் இடத்தினை பெற்று கல்குடா பிரதேசத்திற்கே பெருமை தேடித்தந்த என்.சஜீல் அஹமட் மற்றும் குறித்த பரீட்ச்சையில் சித்தி பெற்ற நண்பர்கள் வட்டத்தில் உள்ள சபீக், ஜவாஹிர் ஆகியோர்களின் புதல்வன் புதல்வி ஆகியோர்கள் கெளரவிக்கப்படு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாறு (G.C.E.O/L1996) ஆண்டில் கல்வி கற்ற நண்பர்கள் வட்டம் **Late (லேட்டா) வந்தாலும் (Latest) லேட்டெஸ்ட்டா நடாத்தி முடித்த குறித்த வரலாற்று ஒன்று கூடலில் இடம் பெற்ற நிகழ்வுகளின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பஹிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.