பதினைந்த வயதான சிறுவன் ஒருவனே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுவனை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக குறித்த பெண்ணுக்கு 21 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஏழாண்டு சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் 21 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் இந்த தண்டனையை விதித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி மற்றும் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 31ம் திகதி ஆகியனவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சிறுவன், அவனது சித்தியினால் கடுமையான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளான்.
அனுராதபுரம் உயர் நீதிமன்றிற்கு உட்பட்ட மரதன்கடவல பகுதியில் இந்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 365 ஆ(2) ம் பிரிவின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு எதிராக சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக பெண் ஒருவர் துஸ்பிரயோகம் செய்தமைக்காக அண்மைக் காலத்தில் உயர் நீதிமன்றமொன்று 21 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கியமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: