அதிபர் ஹஸ்ஸாலின் நிருவாகத்தின் கீழ் வாழைச்சேனை வை.அஹமட்டில் இம் முறையும் 24 மாணவர்கள் சித்தி




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ல்குடா, வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இம் முறையும் 24 மாணவ மாணவிகள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்துள்ளமை இரண்டு வருடங்களாக அதிபர் எனும் நிருவாக கடமையினை திறமையாக செய்து வரும் எம்.என்.எம்.ஹஸ்ஸாலி அதிபருக்கும், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கிடைதுள்ள பாரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

வாழைச்சேனை அந்-நுர் தேசிய பாடசாலையின் ஊட்டல் பாடசாலையான குறித்த வை.அஹமட் வித்தியாலயத்திற்கு 2015ம் ஆண்டு நடுப்பகுதியில் அதிபர் ஹஸ்ஸாலி கடமையினை பொறுப்பேற்ற பொழுது அவ்வருடம் நான்கு மாணவர்களே சித்தியடைந்திருந்தனர். அதற்கு அடுத்த வருடம் 2016ல் வாழைச்சேனை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 26 மாணவர்களை சித்தியடைய செய்து அதிபர் ஹஸ்ஸாலி வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்திருந்தார். அவ்வாறே இவ்வருடமும் 24 மாணவ, மாணவிகள் குறித்த ஐந்தாம் ஆண்டு பரீட்ச்சையில் சித்தியடைந்துள்ளமையானது பாடசாலையினுடைய திறமையான நிருவாக கட்டமைப்பினை எடுத்துக்காட்டுவதாக அமைக்கின்றது.

அத்தோடு குறித்த பாடசாலைக்கு பெற்றார் பதுகாவலர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஊர் நலன் விரும்பிகள், பொது மக்கள், பள்ளிவாயல் சம்மேளம், பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் என தராளமாக அனைத்து உதவிகளையும் செய்து தருவாகவும் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவிக்கும் அதிபர் ஹஸ்ஸாலி அடுத்த வரும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சித்தியடைய செய்து கல்குடாவில் வை.அஹமட் பாடசாலையை சாதனை படைக்க செய்ய போவதாகவும் தெரிக்கின்றார்.

சித்தியடைந்த மாணவ, மாணவிகளுடன் அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் வழங்கிய கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -