பாடசாலை சிறந்த வருடாந்த அறிக்கையிடலில் வடக்கு கிழக்கில் 25 பாடசாலைகள் தெரிவு! கல்வியமைச்சர் விருது வழங்கிகௌரவிப்பு!

காரைதீவு நிருபர் சகா-

பாடசாலைகளின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கறிக்கைப் போட்டியில்
மாவட்டரீதியில் வடக்கு கிழக்கில் 25 பாடசாலைகள் தெரிவாகி சாதனை
படைத்துள்ளன.

கல்வியமைச்சும் இலங்கை கணக்கு தொழினுட்பவியலாளர் அமைப்பும் இணைந்து
இப்போட்டியை தேசிய ரீதியில் இப்போட்டியை நடாத்தியிருந்தது.

இதற்கான பரிசளிப்புவிழா கடந்த (23) திங்கட்கிழமை கொழும்பு
பி.எம்.ஜ.சி.எச்.இல் நடைபெற்றது. கல்வியமைச்சர் அகிலவிராஜ்காரியவசம்
வெற்றிபெற்ற பாடசாலைக்கான விருதுகளை வழங்கிவைத்தார்.

1000மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலை மற்றும் உட்பட்ட பாடசாலை என
வகைப்படுத்தி மாகாண மாவட்ட ரீதியில் வெற்றியாளர்கள்
அறிவிக்கப்படுவார்கள்.
மாவட்டமட்டப் போட்டியில் 1000 மாணவருக்கு மேற்பட்ட பாடசாலைகள் என்ற
வகுதியில் வடக்கு கிழக்கில் 14 பாடசாலைகளும் 1000 மாணவருக்குட்பட்ட
பாடசாலைகள் என்றவகுதியில் மீதி 11 பாடசாலைகளும் தெரிவாகியுள்ளன.


1000 மாணவருக்கு மேற்பட்ட பாடசாலைகள்!
வட மாகாணம்:
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரகல்லூரி முதலிடத்தையும்
ஹொலி பெமிலி கொன்வென்ற் தேசிய பாடசாலை இரண்டாமிடத்தையும் யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
மன்னார் மாவட்டத்தில் சென்ற் சேவியர் மகளிர் கல்லாரி இரண்டாமிடத்தையும்;
சென்ற் சேவியர் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும்
பெற்றுக்கொண்டது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதற்கு
விண்ணப்பிக்கவில்லை.அதனால் யாரும் தெரிவாகவில்லை.
கிழக்கு மாகாணம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் சென்ற் சிசிலியா மகளிர் கல்லூரி
முதலிடத்தையும் வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை இரண்டாமிடத்தையும்
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரி முதலிடத்தையும்
ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி இரண்டாமிடத்தையும் சிங்கள
மத்திய மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி முதலிடத்தையும்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும்
பெற்றுக்கொண்டது.

1000 மாணவருக்கு உட்பட்ட பாடசாலைகள்!

வட மாகாணம்:
யாழ்ப்பாண மாவட்டத்தில் விக்னேஸ்வராக் கல்லூரி முதலிடத்தையும்
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
மன்னார் மாவட்டத்தில் சென்ற் பாத்திமா மகளிர் கல்லாரி இரண்டாமிடத்தையும்
அல்அஸ்ஹர் மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்
மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி மத்திய கல்லூரி இரண்டாமிடத்தைப்
பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாணம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி காளீஸ்வரா கல்லூரி இரண்டாமிடத்தையும்
அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும்
பெற்றுக்கொண்டது.

அம்பாறை மாவட்டத்தில் தம்பட்டை மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தைப்
பெற்றுக்கொண்டது.

சில மாவட்டங்களில் சில வகுதிகளுக்கு பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை.

ஆதலால் அந்த வகுதிகளுக்கான விருது எந்தப் பாடசாலைக்கும் கிடைக்கவில்லை.

தேசியமட்டத்தில் 3 பாடசாலைகள் சாதனை!

தேசிய மட்டத்தில் கொழும்பு விசாகா வித்தியாலயம் முதலிடத்தையும் காலி
சங்கமித்தை மகளர்வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் கம்பஹா ரத்னாவலி மகளிர்
வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

மாகாணமட்டத்தெரிவு!
மாகாண மட்டத்தில் வடமாகாணத்தில் மன்னார் சித்திவிநாயகர்
இந்துக்கல்லூரியும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை சென்மேரிஸ்
கல்லூரியும் மேல் மாகாணத்தில் கொழும்பு பிரின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரியும்
மத்தியமாகாணத்தில் கண்டி தெல்தெனிய தேசிய பாடசாலையும் தென் மாகாணத்தில்
காலி றிச்மண்ட கல்லூரியும் வடமேல் மாகாணத்தில் புத்தளம் தம்மிசார
தேசியகல்லூரியும் வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை றோயல் மத்திய
கல்லூரியும் ஊவா மாகாணத்தில் பதுளை குடகுசும் மகளிர் வித்தியாலயமும்
சபரகமுவ மாகாணத்தில் கேகாலை கேகாலை மகளிர் வித்தியாலயமும் தெரிவாகி சாதனை படைத்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -