நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையாளும் ஜயம்பதி விக்ரமரட்ன ஒரு சமஷ்டி ஆர்வலர். மறுபுறம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரன் விடுதலை புலிகளின் அரசியல் சிந்தனையாளர். இவர்கள் உருவாக்கும் அரசியலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச இலங்கையர் பேரவையின் விசேட ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பாரதூரமான அறிக்கை குறித்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை குறித்த கால எல்லைக்குள் முடித்து விட வேண்டும் என்ற நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.
குறிப்பாக புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் அலுவலகம் என்பன சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றப்பத்திரிகை இயற்கை நீதிக்கு முரணானது மாத்திரமல்ல, அடிப்படைதன்மையற்றதுமாகும்.
இலங்கை தொடர்பிலான போர்குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் சட்டங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான 7 நிபுணர்கள் 7 அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அதே போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பாரதூரமான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அரசாங்கம் அந்த ஏழு அறிக்கைகள் தொடர்பாகவோ குற்றப்பத்திரிகை தொடர்பாகவோ கவனத்தில் கொள்ளவில்லை. இத னால் நாட்டிற்கு ஏற்பட்ட விளைவுகளும் ஆபத்துக்களும் அதிகமாகின. ஜெனிவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது. நாட்டிற்கு
எதிரானது என்று அறிந்தும் அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையாளும் ஜயம்பதி விக்ரமரட்ன ஒரு சமஷ்டி ஆர்வலர். மறுபுறம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ சுமந்திரன் விடுதலை புலிகளின் அரசியல் சிந்தனையாளர். இவர்கள் உருவாக்கும் அரசியலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.
வடக்கு, கிழக்கை ஒன்றாக இணைத்து அதி கூடிய அதிகாரத்துடன் சமஷ்டி முறைமையிலான ஆட்சியை முன்னெடுப்பதற்கான விடயதானங்கள் புதிய அரசியலமைப்
பிற்குள் காணப்படுகின்றன. இதனை எந்தவழியிலேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வதேசத்தில் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் செயற்படுகின்றனர். இதற்காக உள்ளூர் அரசியல்வாதிகளை குறிவைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது பாராளுமன் றத்தில் புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாககையுயர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு தலா 300 மில்லியனை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதிகள் தீர்மானித்துள்ளனர்.
எனவே நாட்டு மக்கள் இந்த விடயத் தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக செயற்படும் அனைவரும் பிரிவினைவாதிகளுக்கு துணைப்போகும் தேசத்துரோகிகளா கும் என்றார். (virakesari)