அதிகாரிகளின் அலட்சியப்போக்கினைக் கண்டித்து 300 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தலவாக்கலை கேதீஸ்-

லவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் மலைத்தோட்ட நிர்வாகத்தினதும் தோட்ட வைத்திய அதிகாரியினதும் அலட்சிய போக்கை கண்டித்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்துக்கெதிராக 25.10.2017 புதன்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருகையில் ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் கடந்த 22ம் திகதி கிறேட்வெஸ்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் சென்றபொழுது கால் இடறி விழுந்துள்ளார். 

உடனடியாக இவரை பொது மக்கள் அத்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தந்து சிகிச்சையளிக்காததால் அவர் உயிரிழந்துள்ளார். அத்தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி இருந்தும் இவரை மேலதிக சிகிச்சைக்காக உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டதால் இவர் உயிரிழந்திருப்பதாக அத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் தோட்ட நிர்வாகத்தினதும் தோட்ட வைத்தியரினதும் அசமந்தப் போக்கினை கண்டித்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 300 க்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற அத்தோட்ட அதிகாரி இப்பிரச்சினை தொடர்பாக கடிதம் மூலம் அறிவிக்குமாறும் எதிர்வரும் 27 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். 

இதனையடுத்து 26.10.2017 வியாழக்கிழமை தொழிலாளர்கள் அனைவரையும் தங்களது பணிக்கு திரும்புவதாக அத்தோட்ட தலைவர் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -