காரைதீவு நிருபர் சகா-
அண்மையில் உள்ளீர்க்கப்பட்ட இலங்கை கல்விநிருவாக சேவை 306 உத்தியோகத்தர்களுக்கான தொடர்பயிற்சி தற்போது நடைபெற்றுவருகின்றது.
கிழக்கில் தெரிவான 39பேருக்கும் இவ்வாரம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் பயிற்சி இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் புதிதாக உள்ளீர்க்கப்பட்ட 39பேரையும் வரவேற்று அறிவுரைகளை வழங்கினார்.
நேரத்துக்கு இயங்குவதுடன் புதிதாக நியமனம் பெறும்போது சொந்த வலயங்களைவிட்டு வெளிவலயங்களில் அல்லது வெளி மாவட்டங்களில்மாகாணங்களில் பணியாற்றுதல் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
மாகாணகல்வித்திணைக்களம் கல்வியமைச்சு தொடர்பான விடங்களில் ஒப்படைகள் வழங்கப்பட்டு அதற்கான தரவுகளும் அவர்களால் சேகரிக்கப்பட்டன.
அடுத்தவாரம் கொழும்பு மீப்பேயில் பயிற்சி இடம்பெற்று அதற்கடுத்தவாரம் அவரவர் வலயத்திலுள்ள தேசிய பாடசாலையில் ஒருவாரகாலம் இணைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.
கடந்த வாரத்திற்கு முன்பதாக அவரவர்வலயகல்விக்கரியாலயங்களில் இணைக்கப்பட்டு அனுபவப்பயிற்சி வழங்கப்பட்டது.