மு.இராமச்சந்திரன்-
அமைச்சர் திகாம்த்திற்கு எதிராக சேறு பூசும் வகையில் அன்மைகாலமாக சிலர் போராட்டங்களை நடத்திருவத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தம் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களளுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க்கோரியும் தலவாக்கலை நகரில் ஆர்பாட்டமொன்று 31.10.2017 மாலை இடம்பெற்றது.
தலவாக்கலை பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களினாலே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை பஸ்தரிப்பிடத்தில் இடம் பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அமைச்சர் திகாம்பரத்தின் பிரத்தியோக செலாளருமாகிய நகுலேஸ்வரன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் சிவனேசன் உட்ட ஆதரவாளர்கள்பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தின் போது நகுலேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் மலையத்தில் கடந்த காலத்தின் மலையகத்தில் அமைச்சு பதவியில் இருந்தவளிடம் இந்திய அரசாங்கத்தினால் மலையகத்தை சேர்ந்த கர்பினி பெண்களுக்கும் வயதானவர்களுக்குமே போக்குவரத்து வசதிக்காக வழங்கப்பட்ட பஸ் வண்டிகள் இப்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அந்த அமைச்சிலிருந்து 30 கோடி ருபா வரை எவ்வித கணக்குகளும் காட்டப்படாமல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனத்திலெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தர் மேலும் மலையக மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் அமைச்சர் திகாம்பரத்திற்கு எதிராக சிலர் பெய்யான ஆர்பாட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வாறான போலி போராட்டங்கள் செய்யவர்களுக்கு எதிராக தொடர்ந்து மலையகம் தழுவிய ரீதியில் எமது சாத்வீகபோராட்டம் தொடரும் என தெரிவித்தார்.