பைஷல் இஸ்மாயில் -
கிராமம் மற்றும் நகரத்தை இணைத்து அடி மட்டத்திலிருந்து இஸ்தாபிக்கப்பட்ட சகவாழ்வுச் சங்கம் மற்றும் தேசிய சிவில் சமூக சம்மேளன செயற்பாட்டாளர்கள் பங்குகொள்ளும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான கலந்துரையாடல் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் விடுதியில் இன்று (22) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்பின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், அதன் செயலாளர் வி.பர்மேஸ்வரன், உப செயலாளர் ஏ.ஜே.கே.இமாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 2.00 மணியளவில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த தேசிய மாநாடு “இலங்கையர் எமது அடையாளம், பன்மைத்துவம் எமது சக்தி” எனும் தொனிப் இடம்பெறவுள்ளது.
இந்த மாட்டுக்கு இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள சகவாழ்வுச் சங்கம் மற்றும் தேசிய சிவில் சமூக சம்மேளன செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இந்த தேசிய மாநாட்டுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து 33 பேரை அழைத்துச் செல்வதற்கான முடிவும் இதன்போது எடுக்கப்பட்டது.
இந்த தேசிய மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.பி.ஜி.விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர் கூறினார்.